info@varanyontrium

எம்மைப்பற்றி

எமது நோக்கு...

முதற்கட்டமாக கனடாவில் பரந்துபட்டு வாழும் வரணி பிரதேச மக்களை ஒன்றிணைத்தல் இதன் போது இளையோர்களை முன்னிலைப் படுத்தல்.  அவர்களுக்கு தன்னம் பிக்கையையும் தாமாகவே சிந்தித்து செயலாற்றும் திறனையும் தாய் மண் உணர்வையும் ஊட்டும் வகையில் அவர்களையே முதன்மைப்படுத்தி ஒன்றியத்தை வழி நடத்திச் செல்லுதல்.

பிள்ளைகளின் கோடை கால விடுமுறையின் போது திறந்தவெளி ஒன்றுகூடல் ஒன்றினை முழுநாள் நிகழ்வாக நடாத்துதல்.
அதில் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வயது வந்தவர்களிற்கான விளையாட்டுகள், பரஸ்பரம் உணவு வழங்கி மகிழ்தல் ஆகிய வற்றினை மேற்கொண்டு ஊர் ஒன்றுமையினை வலுப்படுத்தல்.

ஆண்டில் ஒரு முறை உள் அரங்கில் கலை கலாச்சார நிகழ்வுகள் போச்சுப்போட்டிகள் ஆகியவற்றை நடாத்தி பிள்ளைகளின் திறமைகளை வெளிகொணரல்.

எமக்கான தார் மீகக் கடமை யொன்று எமது கைகளில் இருப்பதனையும் நாம் மறந்து விடக்கூடாது.

நாம் இந்த நாட்டில் வசாதியாக வாழ்ந்தாலும். எம் மண்ணில் வாழும் எம் மக்களின் அவல வாழ்வினையும் சற்று சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். அந்தவகையில் எமது பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் குறைகள், மாணவர்களின் கல்வி சம்மந்தமான குறைபாடுகளை இனம்கண்டு உதவுதல், போரினால் பாதிக்கபட்ட மக்களின் மனிதாவிமான உதவிகள் மேற்கொள்ளல்.

“அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு” உங்கள் கருனைக்கரங்களின் ஆதரவில் எம் ஊர் மாணவச் செல்வங்களின் கல்வியை வளர்த்து எமது பிரதேசத்தை மென்மேலும் மெருகு ஊட்டுவதே எமது நோக்கு.

நன்றி,

வரணி ஒன்றியம் கனடா
*****************************************************************
எம்மைப்பற்றி...

யாம் பிறந்தஊர் கிராமம் நகரமல்லவே எனக்கருதி எவனும் தன்னைதானே தாழ்த்தி எண்ணுதல் தன்நெஞ்சுள்ள எந்தத் தமிழனுக்கும் அழகல்ல அதுவும் வரணிஊரவனுக்கு வடிவல்ல. என்னாலும் இயலும் எம்மாலும் முடியுமென உள்ளுறும் தன்னம்பிக்கையே வாழ்வின் உந்துசக்தியாய் ஒருவனை இன்னுமின்னும் வாழ்வில் உயர்த்திச்செல்லும்.

அப்துல்கலாம் ஒரு நாட்டுப்புறம். வல்லகவியரசு வைரமுத்து வடுகம்பட்டி ஒரு கிராமப்புறம். எந்தப்புறமாக இருந்தாலும் அந்தமனங்களுக்குள் ஓரு அபாரதிறமை எதற்கும் சளைக்காத உறுதி எந்தவகையிலும் எவனுக்கும் தாழ்ந்தவனல்லன் என்ற எண்ணம் இவைகள்தான் எந்தக்கிராமத்தவனாயினும் இன்று உலகெலாம்சென்று உயர்ந்து சிறந்து நிறைந்து வாழ்ந்திடக்காரணம்.

எமது கிராமமும் இதற்கு விதிவிலக்கல்ல ஒன்றி வளர்ந்து இன்று இந்நிலை வரக்காரணம் எவைஎப்படியோ எவர் எந்தமண்ணில் வாழ்நதாலும் அந்தந்தமண்ணில எம்மால் எவ்வளவுக்கு எவ்வளவு இயல்கிறதோ இதுபோல்; சொந்தமண்ணில் வாழும் எம்சொந்ச்சோதர உறவுகட்கும் எல்லாம் இயலும் இயலாதது என்பதையும் இயலவைப்போம். அந்தநம் மண்ணில் வாழும் அவர்களுக்குமாய் சற்றே மனம் திறந்து உழைப்போம் அதன் பொருட்டாய்…..

இந்த இணையத்தளம் என்றென்றும் தன்னாலான தரமான பணிகளை தவறாது செய்யும். எந்தவித காய்தல் உவத்தல் இன்றி கண்களில் வண்ண பேதமின்றி கனடாவில் இருந்தே கச்சிதப் பணியாற்றும். சொந்தஊர் வரணியென மார்தட்டி பெருமையுற சந்ததி சந்ததியாய் தலைமுறைகள் தாமாக முன்வந்துழைக்க தக்கபணியாற்றும். தமிழன் அதுவும் வரணியான் என்று சொல்வதில் பெருமைப்படும். தன்நெஞ்சே தன்னை தகவுளான் தானுமென கருதி துள்ளி எழவைக்கும்.

தரணியெங்கும் வாழ் வரணியிளம் மனசுகளும் வரணி ஓன்றியமாய் ஆங்காங்கு தொழிற்பட வழிவகுக்கும். இவையன்றி யாதொன்றும் அறியாதுதிவ் இணையத்தளம். எம்செயலிதில் யாதொன்றுமில்லை இனியெலாம் இத்தளம் இயங்குவது உங்கள் செயல் உங்கள் கைகளில் யாம் எந்தெந்த நாடுகளில்களில் வாழ்கினும்; அந்தந்த நாடுகளுக்கெல்லாம் பாலமாயிருந்து ஈடிலாப்பணியாற்றும். இயன்றவரை துணைநிற்கும் என்றவகையில் வரணி ஒன்றியம் கனடா வரணியையும் வாழவைக்க வழிவகைகோலும். வாழ்வாதாரப்பணியாற்ற. வலுவாகும் தளமாக தனை மாற்றும்.

அந்தவகையில்

(1) எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய எங்கள்மண் வரணியின் இன்றய சூழலின் இங்கிதம் அறிந்து ஆவனசெய்யும்

(2) சிந்தையில் தெளிவையும் சீரிய கல்வி அறிவையும் தந்தநம்சைவ மகாவித்யாலயம் தம்மின் சேவைகள் உயர்வுற சொந்தநம் சிறார்களின் சீர்கல்வித் தரமுயர தம்மாலியன்ற பணியுறும்.

(3) ஊரவன் எவனோ அவன் உயர்நிலை வளர்ச்சிகள் முன்மாதிரி முயற்சிகளை இனங்கண்டு இத்தளம் ஊடாய் ஒத்தாசைகள் நல்கி அவர்களின் பெருமையும் போற்றும்.

(4) உற்றமோ சுற்றமோ அயலோ உறவோ நண்பனோ அல்லவோ அவர்தம் இழவுகள் பார்ப்பின் அவைதமை மற்றவர் அறிய மரண அறிவித்தலாகவோ செய்திகளாகவோ இத்தளம்கூறும்.. அத்துயர்கண்டு பகிர்வுறவும் செய்யும்.

(5) எந்தநிலையிலும் எங்கள்மண் வரணியின் நற்புகழ்கூற நிச்சயம் இடம்தரும். நீங்களாய் அனுப்பினால் நிச்சயம் வரவேற்புண்டு தங்களின் நிழல்படம் தந்தால் நற்பலன் காணலாம்.

(6) இத்தனைக்கும் மேலாய் அந்தந்த நாடுகளில் வாழும் வரணிமக்கள் ஒன்றியங்களை உருவாக்க முயன்றால் ஆய வழிவகைகூறி இணைந்து செயற்படும்.

(7) உங்களுங்கள் ஆக்கபூர்வமான எண்ணக்கருத்துகளை பகிர்ந்து இத்தளம் ஊடாய் பிரசித்தம் செய்யும்.

நன்றி.

வரணி ஒன்றியம் கனடா.