info@varanyontrium

கனடா வாழ் வரணி மக்கள் ஒன்றியம் மற்றும் கனடா வாழவைப்போம் அனுசரணையுடன் கிளிநொச்சி கண்ணகிபுரம் மக்களுக்கு மூவாயிரம் வாழைக்குட்டிகள் அன்பளிப்பு.

கிளிநொச்சியின் விவசாயக்கிராமங்களில் ஒன்றான கண்ணகிபுரத்தின் விவசாயத்தையும் அப்பிரதேச மக்களின் வாழ்வு மேம்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் பா.உறுப்பினர் சிறீதரனின் ஏற்பாட்டில் கனடா வரணி மக்கள் ஒன்றியம் கனடா வாழவைப்போம் அமைப்பு என்பவற்றின் அனுசரணையுடன் 300 குடும்பங்களுக்கு ஆயிரத்தெண்ணூறு வாழைக்குட்டிகள்
வழங்கிவைக்கப்பட்டன.

கண்ணகிபுரம் விவசாய அமைப்புத்தலைவரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பா.உறுப்பினர் சிறீதரனுடன் கரைச்சி பிரதேசசபைதலைவர் குகராசா உறுப்பினர்களான அன்ரன் டானியல் தயாபரன் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மற்றும் அக்கராயன் பிரதேச அமைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டுசிறப்பித்தனர்.

வாழைக்குட்டிகளை வழங்கிவைத்து விவசாயிகள் மத்தியில் பா.உறுப்பினர் சிறீதரன் உரையாற்றும்போது கிளிநொச்சி மாவட்டம் நீர்வளமும் நிலவளமும் நிறைந்த விவசாய மாவட்டம்.

இங்கு ஏற்கனவே பலமான விவசாயபொருளாதார அடிப்படையிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் தம் வளவுகளில் தோட்டம் செய்து செழிப்பாக வாழ்ந்திருந்தார்கள். அப்போது எங்கள்
எங்கள் மாவட்டத்தில் மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தது. ஒவ்வொரு வாழைச்சந்தை நாட்களிலும் வண்டில்களிலும் சைக்கிள்களிலும் வாழைக்குலைகளையும் ஏனைய உற்பத்திகளையும் அதிகாலையிலேயே ஏற்றிச்செல்லும் பூரிப்பு இப்போது நம்மிடத்தில்
இல்லை.

ஆனாலும் விவசாயக்கிராமங்கள் பல மீண்டும் எழத்துடிக்கின்றன. ஆனாலும் அரசாங்கம் தெங்கு வாழை மற்றும் சிறுதோட்ட உற்பத்தி முயற்சிகளுக்கு போதுமான வசதிகளை ஏற்படுத்த தவறிவருகின்றது.

இந்நிலையில் இக்கிராமக்கள் எங்களிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் புலம்பெயர்ந்த உறவுகள் இந்த உதவியை வழங்க முன்வந்தார்கள். இத்தகைய உதவிகள் மூலம் எமது மக்கள் சுயபொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்றார்.