info@varanyontrium

வாழ்த்துச் செய்தி:அதிபர் திரு. க. மங்களேஸ்வரன்

அதிபரின் பாராட்டுரை..

கனடா வாழ் வரணி ஒன்றியம் வெளியிடும் “சிலம்பொலி – 2011”

சஞ்சிகைக்கு பாராட்டுரை எழுதுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் புதிதாக வரணிமகாவித்தியாலய அதிபராகப் பொறுப்பேற்றதும் மகிழ்ச்சிகரமான செய்தியினை திரு.சி.சுந்தரமூர்த்தி ஆசிரியரூடாக அறிந்து கொண்டேன்.  அப்போது அவர் ஒன்றியத்தின்செயற்பாடு பற்றியும் எமது பாடசாலை மதிலமைப்புப் பணிக்கு நிதி அனுப்பியமைபற்றியும் குறிப்பிட்டார்.  அப்போதுதான் இவ்வாறு உயர்ந்த குறிக்கோளும் இலட்சியமும்கொண்ட ஒன்றியம் இயங்குகின்றது என்பதை அறிந்து கொண்டேன்.  வரணிமகாவித்தியாலயத்திற்கு முதன்மையானதும் ன்றியமையாததும் மதிலமைப்பதுஎன்பதை உணர்ந்து கொண்ட நீங்கள் இரண்டு கட்டமாக சுமார் (ஐந்து லட்சம்) 500000ரூபாய் நிதியினை அனுப்பியுள்ளீர்கள்.  இதற்கு முதற்கண் எனது மனப்பூர்வமானபாராட்டுக்கள்.  மேலும் மதிலைத் தொடர்ந்து பூரணப்படுத்துவதற்கு உங்கள் உதவியினைஎதிர்பார்த்து நிற்கின்றேன்.தங்கள் ஒன்றியம் திடஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வீறுநடை நடக்கஎல்லாம் வல்ல இறையருள் வேண்டிநிற்கின்றேன்.

நன்றி

திரு. க. மங்களேஸ்வரன் (SLPS – 2:1))

அதிபர்

யா/வரணி மகா வித்தியாலய

வரணி.

201113

எம் மண்ணில் இருந்தோர் வாழ்த்துரை… திரு.நடராசா திருவாசகன்

வரணிப்பிரதேச புலம்பெயர் உறவுகள் கனடாவில் எமது வாழ்வியலையும் ,பண்பாட்டையும் பேணிப்பாதுகாப்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகின்றது.

அவர்களது வளமான வாழ்வுக்கான“சிலம்பொலி” மலருக்காக இக் கட்டுரையினை எழுதிக் கொள்வதையிட்டு பெருமகிவடைகின்றேன்.

திரு. நடராசா திருவாசக (J.P)

B.A[Jaf.], N.Dip.In.Teach

[NCOE]PGDE [OUSL]

வளமான வாழ்வுக்கான வழிகாட்டல் தந்திரோபாயங்கள்“நம்பினோர் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு………..” என்ற வாக்கிற்கேற்பவாழ்வதன் மூலம் அனைவருக்கும் வளமான வாழ்வு உண்டு. அர்த்தமுடையதாக அமையவேண்டுமானால் வாழ்க்கைக்கான வழிகாட்டல் என்பது அவசியமாகும்.

Read more...

வாழ்த்துச் செய்தி: க. முதலிக்குட்டி (ஆசிரியர்)வரணி மகாவித்தியாலயம்.

கனடா வரணி ஒன்றியம் வளர்ச்சிபெற வாழ்த்துக்கள்.

“பெற்ற தாயும் பிறந்த நன்னாடும் நற்ற வானில் நனி சிறந்தனவே”

என்றதற்க்கமய எமது வரணியம்பதியின் மைந்தர்கள் எமது வரணிக்கிராமத்தை விட்டு கனடா சென்றாலும் தமது பிறந்த மண்ணை வளம்படுத்தகனடா ஒன்றியத்தை அமைத்தது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.

Read more...

வாழ்த்துச் செய்தி:கலாநிதி வசந்தகுமார்.

“பெற்றதாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவவானிலும் நனி சிறந்தனவே”
என்றான் பாரதி இந்த வாக்கிற்கிணங்க காலச் சூழலில் அகப்பட்டு ஞாலமெல்லாம் பரந்து வாழும் வரணியூர்ச் செல்வங்கள் கடல் கடந்து வாழ்ந்தாலும் தமது பாதங்களைத் தொடர்ந்தும் பற்றி நிற்பதை எண்ணிப் பரவசமடைகின்றேன்.  பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் ஊரின் பெயரால் ஒன்றுபட்டு நிற்கும் உங்களை நினைத்துப் பெருமிதம் அடைகின்றேன்!

Read more...

வாழ்த்துச் செய்தி:சிறப்பு விருந்தினர்கள் திரு. திருமதி. பாலசுப்பிரமணியம்தரணியெங்கும் ஒலிக்கட்டும்வரணித்தமிழன் சிலம்பொலி “சிலம்பொலி”  எனச் சொல்லும் போதே நரம்புகளில் தமிழுணர்வு சலங்கை கட்டி நர்த்தனமாடுகிறது.

கனடா வரணி ஒன்றியம் நடாத்தும் சிலம்பொலி எனும்கலையிரவு சிறக்க வாழ்த்துகின்றோம்.
வரணி மண்ணில் மக்கள் பணியாளராகப் பணிபுரிந்த எங்களை இந்நிகழ்விற்கு அழைத்துச் சிறப்பும் பாராட்டும் வழங்கியமைக்காகவும் எமது நன்றியையையும் பாராட்டையும் கனடா வரணி ஒன்றியத்திற்குதெரிவிக்கின்றோம்.

Read more...

வாழ்த்துச் செய்தி: கௌரவ விருந்தினர் பேராசிரியர் இ. பாலசுந்தரம்“வரணியூர் மக்கள் ஒன்றியம்” கடந்த பல ஆண்டுகளாக கனடாவில் வாழும் வரணியூர்மக்களை ஒன்றிணைத்து ஒற்றுமையுடன் வாழ வழிகாட்டும் அமைப்பாகச்செயற்படுதல் கண்டு பேருவகையடைகின்றேன்.

உலகின் பல்வேறு நாடுகளில்புலம்பெயர்ந்து வாழும் ஈழத்மிழரின் இரண்டாம் தலைமுறையினர் அவ்வந்நாடுகளில்கிடைக்கும் வசதிகளையும் வாய்ப்புகளையும் நன்கு பயன்படுத்திப் பல்வேறுசாதனைகளைப் புரிந்துவருகின்றனர்.

Read more...

வாழ்த்துச் செய்தி: பொ.யோகநாதன் (பொருளாளர் வரணி ஒன்றியம்)

வரணி மண்ணிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் நாம் வாழ்ந்து வந்தாலும் கனடாவில் வாழும் வரணி மக்களாகிய நாம் எமக்கென ஒரு ஒன்றியம் அமைத்து வருடத்தில் இரு தடவைகள் கூடிக்குலாவியதோடு நிற்காமல் நாம் பிறந்த மண்ணுக்கும் கல்வி தந்த எம் தாய்ப் பாடசாலைகளுக்கும் உதவிக்கரம் நீட்டி ஏனைய ஊர்கள் போன்று எமது ஊரம் பாடசாலையும் அதன் மாணவச் செல்வங்களும் சிறந்து விளங்க நம்மாலான அனைத்து உதவிகளையும் வளங்கி மேம்படச் செய்வதே வரணி ஒன்றியத்தின் பிரதான குறிக்கோளாக அமைகிறது.

அந்த வகையில் ஒன்றியத்தினால் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமையை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வருகின்றேன். எமது ஒன்றியமானது வெளிப்படைத்தன்மை கொண்டதாக நிர்வாகமயப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நிர்வாக மாற்றம் நடைபெறுகிறது.

Read more...

வாழ்த்துச் செய்தி: க.பாலகிருஷ்ணன் (செயலாளர் வரணி ஒன்றியம்)

கல்வளைப் பிள்ளையார் துணை.

ஒரு குடையின் கீழ் குழுமியிருக்கும் வரணியூர் மக்களுக்கும் எங்கள் அழைப்பின் பேரில் வருகை தந்திருக்கும் பெரியோர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது அன்பான வணக்கங்கள். கோடைகால ஒன்றுகூடல்கள் குளிர்கால ஒன்றுகூடல்கள் எல்லாமே எமது தொலைந்துபோனஅந்த நாட்களை மீட்டிப்பார்க்கும் ஒரு பொழுதாகவே நான் எண்ணுகின்றேன்.

அத்துடன் எமக்குள் ஒரு நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்காகவும்  கனேடிய வாழ்வியலில் நிகழும் மாற்றங்கள் எம்மை எவ்வளவு தூரம் பாதிக்கின்றதுஅதிலிருந்து மீள்வது எப்படி என்பவற்றை கலந்துரையாட இப்பொழுதை நாம் பயன்படுத்த வேண்டும் பயன்படுத்துகின்றோம்.

Read more...

வாழ்த்துச் செய்தி:வே.விஜயகுமார் ( தலைவர் வரணி ஒன்றியம்)அன்பான வரணிப் பெருமக்களிற்கும் வரணிவாழ் மக்களின் மேம்பாட்டுக்கு உதவும் அனைத்து மென்மையான இதயங்களிற்கும் என் முதற்கண் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருப்பங்களை ஏற்படுத்தும் தமிழினத்தின் ஒருவனாக இருந்து ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். “தனிமரம் தோப்பாகாது” என்ற முதுமொழியைப் பொய்யாக்கி தனிமரமும் தோப்பாகும் அதுவும் விழுதுகளை எறிந்து கிளைகள் பரப்பும் என்பதற்கு எமது கனடா வரணி ஒன்றியம் ஒரு முழுச்சாட்சி. இதை முதலில் ஒரு தனிமனிதனாக ஆரம்பித்துவைத்தவர் தம்பி…..

Read more...

வாழ்த்துச் செய்தி: செந்தமிழன் (தெறிப்பு-கவிவரி)

வாழ்த்துச் செய்தி:திரு.சிற்றம்பலம் துரைராசா (தவிசாளர் சாவகச்சேரி பிரதேச சபை)