info@varanyontrium

கல்விமரபு

வரணிப்பிரதேச புலம் பெயர் உறவுகள் கனடாவில் எமது வாழ்வியலையும் மண்வாசனையினையும் பேணிக்காத்து வருகின்ற செய்தி தாய்மண் உறவுகளுக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது. அவர்கள் எமது பண்பாட்டு மரபுகளை காப்பதற்காக எடுத்து வரும் முயற்சிக்காக இக் கட்டுரையினை எழுதிக் கொள்வதில் பெருமகிழ்வடைகின்றேன்.

திரு. நடராசா திருவாசகன்.

B.A (Jaf) N . Dip . in . Teach (NCOE)

-PGDE- (OusL)

சமாதான நீதிவான்.

வரணியின் அமைவிடம் இந்திய உபகண்டத்திற்கு தெற்கே உள்ள இலங்கைத் திருநாட்டின் வடக்கே யாழ்ப்பாணம் அமைந்துள்ளது. அப் பிரதேசத்தில் சமய வாழ்வியலும் கல்வியும் சிறப்பாக உள்ள இடமாக தென்மராட்சி விளங்குகின்றது. தென்மராட்சியில் கொடிகாமத்திலிருந்து வடக்காக 2 கி.மீற்றர் தூரத்தில் வரணிப்பிரதேசம் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக வடக்கே முள்ளி கடல் நீரேரியும் கிழக்கே மிருசுவில் கழிக்கரையும் தெற்கே கொடிகாம மின்கலமும் மேற்கே கரவெட்டியும் கப்பூது கடல் நீரேரியும்  சுற்றிக் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தின் கீழ் 14 கிராமங்கள் உள்ளன.
பண்டைக் காலத்தில் இயற்கையழகும் குடியிருப்புக்களாலும் ஏனைய பிரதேசங்களை விட வர்ணிக்ககூடிய வகையில் இப்பிரதேசம் காணப்பட்டமையால் வரணி என அழைத்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும் வரணி என்பது மாவிலங்கம் என்ற ஒரு மரவகை வரணி என்பதன் திரிபே வரணி எனக் கொண்டு செழிப்பான பூமி என்ற நிலையில் இவ்விடம் பெயர் பெற்றுள்ளது என்பார்கள். பண்டைக்காலத்தில் பல பிராமணக்குடியிருப்புக்கள் நிறைந்து வாழ்ந்தமையின் அதனடிப்படையில் “வரணி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என முன்னோர்கள் கூறுவது முக்கியமானதாகும். இன்றும் இப்பி”ரதேசத்தில் வெங்கிராயன்ää தீனிக்கிராய்ää தாவளம்ää போன்ற இடங்கள் முக்கியம் பெறுவதைக் காணலாம்.

வரணிப்பிரதேச கல்விமரபு:-

எமது முன்னோர்கள் நிரம்பிய கல்வி அறிவுடையவர்களாகவும் சோதிடர்களாகவும் சாஸ்திர அறிவுடையவர்களாகவும் கலைஞர்களாகவும் மருத்துவ ஆற்றலுடையவர்களாவும்  வரலாற்றாசிரியர்களாகவும் சிறந்த வழிகாட்டியாகவும் வாழ்ந்துள்ளமை தான் எமது பிரதேசம் இன்றும் அழியாப் புகழுடன் இருப்பதற்கு காரணமாகும். அவர்களது தவமும் யோகமும் இன்றும் எம்மைக் காப்பாற்றியுள்ளது. பண்டைய எமது பிரதேச முன்னோர்கள் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றவர்களல்ல. ஆனால் இன்று பட்டம் பெறுபவர்களுக்கு மேலான பல சாதனைகளை அவர்கள் செய்துள்ளனர்.
எமது பிரதேசத்தின் கல்விமரபானது செவிவழிக் கல்வியாக இருந்தது. தமது பிள்ளைகளுக்கு மூத்தோர் தமிழையும் கணித சாஸ்திர விதிகளையும் சமயக்கருதத்துக்களையும் புகட்டியுள்ளனர். இதனை ஆலயங்களை மையப்படுத்தியே மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலப்போக்கில் குருவின் வீட்டில் சென்று குருவிற்கு பணிவிடை செய்து பிள்ளைகள் கல்வியைக் கற்றுள்ளனர் என முன்னோர்கள் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். குருவானவர் சம்பளம் வாங்காது சேவை புரிந்துள்ளார் என்பது உண்மையே மாணவர் பூரண அறிவு பெற்ற பின்னரே சமுக ஈடுபாட்டில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் அரச சேவையில் ஈடுபடாத எமது முன்னோர்கள் வைத்தியத்துறையில் புகழ் பெற்றுள்ளனர். அவர்களது பெயர் இன்றும் பேசப்படுகின்;;;;;;றது. விசகடிää மற்றும் நோய்களுக்கு “குலசேகரம்” என்பவர் வரணி இடைக்குறிச்சியில் புகழ் பெற்றவராக வரணியில் மட்டுமன்றி நாட்டின் பல பிரதேச மக்களாலும் புகழப்பட்டவராவார். அத்துடன் “கண்வைத்தியம்” “பரியாரியார்”;ää“வாத்தியார்” “சாத்திரியார்” போன்ற பட்டங்கள் சமூகத்தினால் பெற்ற பெருமைக்குரிய முன்னோர்களைக் கொண்ட பிரதேசமாக வரணிப் பிரதேசம் விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

Read more

கல்விமரபு (2)