info@varanyontrium

பண்பாட்டம்சங்கள்

வெளிநாட்டு தொடர்பும் வாய்ப்பும் வரணிப் பிரதேச மக்களின் பொருளாதாரத்தையும்ää வாழ்க்கை அந்தஸ்தையும் உயர்வடையச் செய்தது. இவ்வாறு புலம்பெயர் உறவுகள் ஒன்று பட்டு ஒற்றுமையாக செயற்பட்டு எமது வரணிப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்கான முயற்சிகளை முன்னெடுத்தால் எமது பழம் பெரும் வரலாற்றுப் பெருமைகளைப் பேணுவதுடன் வளரும் தலைமுறையினை முன்னேற்றப்பாதையில் வழிகாட்டமுடியும்.

வரணிப்பிரதேசத்தின் தனித்துவமான பண்பாட்டம்சங்கள் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். பண்பாடு என்பது “அனைவராலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களும்ää சமூதாய மரபுரிமையாக பெற்ற நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அடங்கிய தொகுதி எனக் கொள்ளாலம்.” எனவே எமது பண்பாட்டு விடயங்களைக் கற்பிப்பதும்  கற்பதும் எமது பொறுப்பாகும். பண்பாடானவை பின்பற்றப்படுவதன் மூலம் அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்படவேண்டிய கருமமாகும்.
எமது வரணிப்பிரதேச பண்பாட்டு அம்சங்கள் பல்வேறு காரணங்களால் மாற்றமடையக் கூடிய ஏது நிலை கடந்த காலத்தில் ஏறுபட்டது. அரசியல் சமுக பொருளாதார மாற்றமும் இம் மாற்றத்தினால் ஏற்பட்ட கல்வி தொழில்  தொடர்பாடல் புலம்பெயர்வு போன்றவை குறிப்பிடத்தக்கது. எமது வரணிப்பிரதேசத்தில் பழம் பெரும் பண்பாடுகள் இன்றும் கட்டிக்காக்கப்படுகின்றது. உணவு உடை உறையுள் புழங்கும் பொருட்கள்ää வீட்டுப்பாவனைப் பெருட்கள் கட்டிடங்கள் எழதுகோல் ஏடுகள் வேளான் நிலங்கள் கால்நடைகள் தொழிற்கருவிகள் சடங்குப் பொருட்கள் என்பன எமது பண்பாட்டைச் சார்ந்து இன்றும் ஒளிருகின்றன. இதனை விட இன்றும் பழக்கவழக்கமும் நடிப்பு இசை நடனம் உணவு உண்ணும் முறை தலைவாரும் முறை எமது பண்பாட்டை இன்று மேலும் வளப்படுத்துகின்றது. இவ்வாறான பண்பாட்டை எமது பிரதேசத்தில் உள்ள அனுபவம் வாய்ந்தவர்கள் முன்மாதிரியாகவும் சிறுவர்களுக்கும் அறிவுரையாகவும் கூறிவருகின்றனர்.எமது வரணியின் சிறப்பை குறிப்பாக நோக்கும் போது வரணியிலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள எம்மவர்கள் மதம் மாறாது இன்றும் எமது பண்பாட்டை அப்படியே தமது பிள்ளைகளுக்கு ஊட்டுவது எமக்கு நம்பிக்கையை தருகின்றது. மாறாக சிலர் பணத்துக்காக எமது பண்பாட்டை விட்டு மதம் மாறி வாழ்ந்து வருவது வேதனை தரும் விடயமாக இருக்கின்றது.
எமது பிரதேசத்தின் பனாட்டுää பழஞ்சோறும் ஒடியற்பிட்டும் பால் மோர் தயிர் என்றால் இன்றும் பலருக்கு விருப்பமாக இருக்கும். இன்று பல புதிய வகை உணவு எம்மை ஆட்கொண்ட போதும் நெல்லரிசி சோறு மதிய உணவாக உள்ளமை பண்பாட்டின் அங்கமாகும்;. முன்னோர்கள் கருத்துப்படி அன்று சுடச்சுட மொட்டைக்கறுப்பன் சோறு சமைத்து சாப்பிட்டவர்கள் என்றால் இன்று எமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். உணவினை வாழையிலையில் இட்டு உண்பது தனிரகம்.

இன்றும் – அன்றும் வெள்ளை உடை அணியும் பழக்கம் எம்மவர் மத்தியில் உள்ளது. வேட்டியும் சால்வையும் அணிவது ஆண்களது மரபு. பெண்களது பண்பாட்டு உடையாக சாறி உள்ளது. இவ்வாறான பண்பாட்டு மரபை இளைய தலைமுறை பேணுவதற்கு வரணியிலும்ää புலம்பெயர்நாடுகளிலும் உள்ள எம் உறவுகள் கரிசனை காட்ட வேண்டும்.

எமது வரணிப் பண்பாட்டில் நாச்சார வீடுகள் பல இருந்துள்ளன. இன்று நவீன மாற்றத்தால் பல வீடுகள் மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன. பிள்ளைகளுக்கு நாச்சார வீடுகள் பற்றி தெரியாத நிலை உள்ளது. சமூக நோக்கில் கிணறுää சுமைதாங்கிää ஆவுரஞ்சிகல் என்பன கட்டப்பட்டது. வயல்வெளிää குளங்களுக்கு அண்மையில் மாடுகள் தினவெடுக்கவென இவை முன்னோர்களால் கட்டப்பட்டு பேணப்பட்டு வந்தது. இவை பற்றி யாரும் இன்று அக்கறையற்று இருப்பது கவனிக்கத்தக்கது. தமது அன்றாடப் பாவனையில் புழங்குபொருட்களாக பெட்டகம்ää மூக்குப்பேணிää காசாண்டி…….. போன்றன இருந்துள்ளது. இவை பற்றிய சொற்பதங்கள் இன்று அருகி விட்டன. இன்று விஞ்ஞான ஆராச்சிகள் பித்தளைப் பாத்திரங்களின் மருத்துவ உண்மைகளை ஏற்றுள்ளன. அதனை எம் முன்னோர் உணர்ந்து வரணியில் செயலாற்றியுள்ளனர்

Read more...