info@varanyontrium

வரணி ஒன்றியம் வாழ்த்துப்பா

 வாழ்க நம் வரணி

வாழ்க நம் ஒன்றியம்

வாழிய வாழியவே.

வாழ்க நம் தமிழினம்

வளர்க தம் இலட்சியம்

வளர்ந்தென்றும் பயனுறவே.

 

..வாழ்கநம் வரணி..

வானுயர் பனைவளம்

வாழநல் உயர்புலம்

வளமுற ஓங்கிடவே..

வாழ்க நம்கலை நயம்

வளர்க நம் புலமைகள்

வளர்ந்தென்றும் ஒளியுறவே.

 

..வாழ்கநம் வரணி..

ஏழ்மை அகன்று

ஈகை நல்லாளுறும்

உளவளம் உயர்ந்திடவே.

ஏர் கமம் ஊர் வயல்

இயல் வள வனப்புகள்

என்றென்றும் எழிலுறவே

 

..வாழ்கநம் வரணி..

வேற்றுமை அச்சம்

விரக்தியும் நீங்கிவல் -கல்வி

வித்துவம் வளமுறவே

இடர் பகை துன்பம்

இன்மை அருகிநல்

இன்பங்கள் சூழ்ந்திடவே.

 

..வாழ்கநம் வரணி..

உலகே மெச்சநன்

ஊர் எங்கள் வரணி

உயர்ந்தென்றும் வாழ்ந்திடவே

உயிரே வைப்பினும்

ஊரவர் ஒன்றி நாம்

உலகெங்கும் தகஉறவே.

 

..வாழ்கநம் வரணி..

வணக்கம்..

ஆக்கம் : சிவா. சின்னத்தம்பி

பாடியவர்: ஆசிரியர் வர்ண ராமேஸ்வரன்

20-07-2008