info@varanyontrium

வாழ்த்துச் செய்தி:திரு. பாலகிருஷ்ணன் கந்தசாமி (செயலாளர் வரணி ஒன்றியம்)

செயலாளர் சிந்தனையில் சில வரிகள்….
கல்வளைப் பிள்ளையார் துணை.

வெண்பனிகாலத்தில் எவ் இடர் மத்தியிலும் கூடியிருக்கும் எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் அன்புக்குரிய அனைவருக்கும் இம் மலரிநூடாக சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானிலும் நனி சிறந்தனவே

என்பதற்கு ஏற்ப எம்மண்ணை எண்ணாதவர்கள் இங்கில்லை. பலமான வரலாற்று தொன்மைமிக்க எமதூர்.  தமிழர் வாழ்வில் கடந்து போன கசப்பான அனுபவங்களின்பின் இன்று பற்பல முனைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. எனினும் அவை எமதூரின் தேவைகளை முழுமையாக தீர்த்து வைக்கவேண்டும்.   கனடாவில் உள்ள மற்றைய ஊர்ச்சங்கங்கள் ஏற்கனவே பற்பல வேலைத்திட்டங்களை செய்து முடிந்துள்ளன. எமக்கொரு வழிகாட்டலாக அவை அமைந்துள்ளன. எனவே நாமும் எமது இயலுமான வளங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து மிகவும் பிரயோசனமான ஒரு வேலைத்திட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். இது எமது கடமையாகும். “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.”

Read more...

வாழ்த்துச் செய்தி:திரு.வே. விஜயகுமார் (தலைவர் வரணி ஒன்றியம்)

தலைவரிடமிருந்து சில வரிகள்

இந்நிகழ்வுக்கான செயற்பாடுகள் சென்ற ஆண்டு முன்னைய நிர்வாகத்தால் முழுமையாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த்தும் நாட்டு நிலைமைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அவற்றை ஓரளவு நிறைவு செய்துள்ளோம். அதேபோல் தொடர்ந்துவரும் நிர்வாகத்தினரும் இதுபோன்ற முயற்சிகளை தொடராக ஏடுத்துச் செல்லும்போது எமது ஒன்றியத்தின் வளர்ச்சி மேல்லோங்கிச் செல்லும் எனக்கருதுக்கின்றேன்.

அத்துடன் நிற்காமல் இன் நிகழ்வுகளில் எமது பிள்ளைகளையும் பங்குபற்றவைத்து எமது மண்வாசனையுடன் வளிநடாத்திச் செல்வோமாயின் இப்படியான நிகழ்வுகள் பயனுள்ளதாக அமையும் என எண்ணுகிறேன். வரணி மண்ணில் பல திருவிழாக்கள் கலை விழாக்களை திறம்பட நடத்தியவர்கள் நாம். இங்கு வருடத்தில் இரு விழாக்களை. ஏன் நடாத்த முடியாது. இதை எல்லோரும் சிந்தித்து செயற்படவேண்டும்.

Read more...

வாழ்த்துச் செய்தி:வயிரமுத்து திவ்வியராஜன் ( ஒன்றிய போசகர் குழு)எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்த எங்களூர்……இன்று.

அண்மையில் எங்கள் சொந்த மண்ணை மிதித்து வந்தோம். காவற் படையின் கூண்டுக்குள் எமது கிராமம் இருப்பதாய் உணர்ந்தோம். எல்லையில் தொடங்கிய காவற்படை முகாம் முள்ளி வெளிவரை நீண்டும் தொடர்ந்தும் பரந்தும் தெரிந்தது.

Read more...

வாழ்த்துச் செய்தி: திரு. சிற்றம்பலம் துரைராசா. (முன்னை நாள் அதிபர் வரணி மகாவித்தியாலயம்)சைவமும் தமிழும் வேர்விட்டு வளர்ந்து விருட்சமாய் இருக்கின்ற வரணி மண்ணின் பெருமையையும் புகழையும் கனடா நாட்டிலும் வளர்க்கின்ற வலுவான எண்ணத்தோடும்.

வரணி மண்ணிற்கு சேவை செய்ய வேண்டுமென்ற இலச்சியத்தோடும் உங்கு உள்ளவர்களின் நலன்களை பேணுகின்ற கருத்தோடும் ஒன்றியமொன்று உருவாக்கி நன்கு வளர்ந்து வருவதையறிந்து அளவில்லா ஆனந்தமடைகிறேன்.

சிறந்த கட்டுப்பாடுகளோடும், உயர்ந்த சிந்தனைகளோடும் வளர்கின்ற உங்கள் ஒன்றியத்தின் செயற்பாடுகள் எப்போதும் உலகெங்குமுள்ள வரணி மக்களிடமிருந்து பெரும் பாரட்டையும் அன்பான ஆதரவையும் என்றும்  பெறும் என்பதில் சிறிது சந்தேகமும் இல்லை.  ஒன்றிய நிர்வாகத்தினர் துணிவோடும் சிறந்த தமிழ் நோக்கோடும் மக்களின் உரிமைகளை மையமாக வைத்து எடுக்கின்ற செயற்பாடுகள் கடந்த சகாப்தங்களில் துன்பம் அனுபவித்த மக்களுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் மன மகிழ்வையும் கொடுக்கிறது.

Read more...

வாழ்த்துச் செய்தி:கதிர்காமர் வாரித்தம்பி (முன்னாள் மேல்நீதிமன்ற பதிவாளர்)

வரணி ஒன்றியம் நடத்தும் ஒன்றுகூடலின் போது வெளியிடும் இம்மலருக்கு என் ஆசியை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

வந்தாரை வாழ வைக்கும் வரணி என்ற பெருமையைப் பெற்ற இக்கிராமத்தை யாழ் மாவட்டத்தில் அறியாதார் சிலர் என்றே கூறலாம். இக்கிராமம் தென்மராட்சியில் மிகவும் செழிப்பான கிராமமாகும்.  வடமராட்சி லிபரேசன் ஒப்பரேசன், 1995ல் நடந்த யாழ் நடவடிக்கைகளின் போது

இடம்பெயர்ந்து வந்த லட்சக் கணக்கானவர்கட்கு சகல வசதிகளும் செய்துகொடுத்து ஆதரித்தவர்கள் இவர்களே.

Read more...

வாழ்த்துச் செய்தி: வரணி மகாவித்தியாலயம்

 

வாழ்த்துச் செய்தி: திரு. சிவா சின்னத்தம்பி ( ஒன்றிய போசகர் குழு)அம்மா ஓராலயம். அறிவுப்பால் ஊட்டிய அப்பாமகா வித்தியாலயம்!

ஆண்டதலைமுறை மீண்டும் ஒருமுறை ஆண்டயாவையும் இழவுகளாகிப் போனவைபோக மாண்ட தமிழின மாமறநினைவுகள் மீழவலுவுடன் உறுதியுமாக!

தூண்டும் உணர்வுகள் தூய தேசநல் கனவுகளாக! தாழ்ந்தும் தளிர்விடும் தமிழினம் ஒன்றியுமாக! வாழ்ந்துவளரும் வரணியும் ஒன்றியமாக! நாளும் விழிப்புடன் தொழிற்படும் வலுவுளராக! வாழும் மண்ணையும் வாழ்ந்த நம் மண்ணையும் நேசிப்பவர்களாக வரணி மக்களின் வரணி ஒன்றியம் இனியொரு புதுவிதி செய்யும்.

அதுவே எங்களின் ஊர்நல பெருநிதியமாக்கி பொருள்பட வாழ்வோம். இதுவே இழந்ததை மீட்டும் இலட்சியத் தொண்டெனக் கருதி உயர்பணி செய்வோம். இனியும் இனியும் எதையும் இழவாதிருக்க இறைபணியாக இயன்றதைச் செய்வோம். உலகையே வலம்வர உதவிய கல்வியைத்தந்த வரணி மகாவித்தியாலயம் தன்னை வளமுறச்செய்வோம். வாழ்வின் ஆதாரம்கல்வி. அதைவளமுறசசெய்ய வாரி வழங்கினால்; வளரும் தானாய் இங்குவாழ் இளய தலை முறையினரின் கல்வி.

“கற்க கசடற கற்பவை: கற்றபின்
நிற்க அதற்குத் தக.” என்றார் வள்ளுவர்

“பிச்சை புகினும் கற்க நன்றே” என்றார் ஒளவையார்

Read more...

வாழ்த்துச் செய்தி : திரு.வே. பாலசுப்பிரமணியம் – B.A.,M.ED


அரும்பணி தொடர வாழ்த்துக்கள்.

Read more...

வாழ்த்துச் செய்தி : கலாநிதி திரு. செ. சந்திரசேகரம்கலாநிதி செ. சந்திரசேகரம்

(BA Hons(Jaf), MA (Col) PhD (China)

வாழ்த்துரை

வந்தாரை வாழவைக்கும் வரணியூர் பெற்றெடுத்த கணடாவாழ் மக்களின் வரணி ஒன்றியத்தின் இவ் வெளியீட்டு மலருக்கு வாழ்த்துரை வழங்குவதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல இன்னல்களை அனுபவித்து பல தேசங்கள் கடந்து கணடாவில் மெய் சிலிர்க்கும் குளிரின் மத்தியிலும் கடினமான உழைப்பில் வாழ்ந்து வரும் எனது இனிய உறவுகள் தாங்கள் பிறந்த மண் மீது பற்றுக் கொண்டு அதன் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்காக வரணி ஒன்றியம் என்ற நிதியத்தை ஸ்தாபித்தமை மிகவும் மகிழ்ச்சியான ஒரு பொது நலன் சார்ந்த நடவடிக்கை ஆகும்.

Read more...

வாழ்த்துச் செய்தி : திரு. சிவஞானம் சிறிதரன் (எம்.பி)சிவஞானம் சிறிதரன்
பாராளுமன்ற உறுப்பினர்
தமிழ் தேசிய கூட்டமைப்பு
யாழ் மாவட்டம்.

அடையாளமாகும் வரலாற்றில் கனடா வறணி ஒன்றியம்…

பருத்தித்துறை பயணத்தில் கொடிகாமத்தில் இருந்து தட்டிவான் ஏறிஊர் வியளம் பேசிப்போகிற போதுசுட்டிபுரத்தில் இறங்கி பொட்டு வைத்துபுறப்படுகிறபோது வறணி எங்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்திருக்கிறது எங்கள் அப்புவுக்கும் ஆச்சிக்கும்வறணியின் முழுமையான இனிமை புரியும் அதேபோல புலம்பெயர்ந்து வறணி மனிதருக்கும் வறணியின் வற்றாத சுவைபுரியும் வறணியின் தவிர்த்து எப்போதும் எம் தாய் நாட்டின் வரலாற்றை எடுத்தியம்பவியலாது அந்த அளவில் அதன் மடியில்விரிந்து கிடக்கின்றுது வரலாறுவளமான மண்ணுக்கும்வற்றாத உழைப்புக்கும்விருந்தோம்பும் பண்புக்கும்எப்போதும் குறைவற்ற அட்சயம்வறணி என்ற வணக்கத்துக்குரியஊர்எவரிடமும் அது கைகட்டி நில்லாதநிறைவான நிலம் அதுதாய் மண் சிங்கள இனவாதத்தால் வதையுண்ட காயங்கள் வறணியின் மேனியிலும்நிறையவே உண்டுதாயின் துயர் கண்டுபோய் எதிரியுடன் மோதியபெருமைமிகு புதிய புறநானூற்றின் புதல்வர்களை ஈன்ற பெரும்தாய் வறணி மண்உலகறிந்த எழுத்தாளர்களை கல்விமான்களைபக்திப்பண்பை தந்ததும் இத்தாய்மடியெனநினைக்கும்போது மனம் வறணியின் மைந்தர்களை வாரிஅணைக்கத்துடிக்கின்றது .

Read more...

வாழ்த்துச் செய்தி: பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம்


ஈழத்தமிழர் உலகின் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இப்புலம்பெயர் நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்த போதிலும் தாயகத்தில் இல்லாத வசதிகளும் வாய்ப்புகளும் எம் மக்களுக்குக் கிடைத்தமையால் அவர்கள் வளமான வாழ்க்கையைப் புலம்பெயர்ந்த நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டனர். இந்நாடுகளில் இளந்தலைமுறையினர்; பாடசாலைகள் கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் என்பனவற்றில் பல சாதனைகள் படைத்து வருகின்றார்கள். கடும் உழைப்பின் பயனாக மிகக் குறுகிய காலத்தில் ஈழத்தமிழர் கனடாவில் தம் அடையாளத்தை நிலைநாட்டும் வகையில் பொருளாதாரத்திலும் வாழ்க்கை முறையிலும் மேம்பட்டு விளங்குகின்றனர். இப்பின்னணியில் வரணி மக்கள் ஒன்றியம் பற்றி நோக்குதல் பொருத்தமாகும்.

Read more...